சிவகங்கை மாவட்டம் இடையமேலூர் ஊராட்சி வேலாங்கப்பட்டி கிராமத்தில் சுடுகாட்டிற்கு அருகில் உள்ள கிராமத்திற்கு சொந்தமான நத்தம் புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்பு நிறைந்துள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் அருகில் உள்ள சுடுகாடு மற்றும் இடுகாட்டை சீரமைத்து தரவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.