அகற்றப்பட்டது

Update: 2022-10-11 13:37 GMT


தோவாளை தாலுகாவுக்கு உட்பட்ட பூதப்பாண்டி செட்டித்தோப்பு பகுதியில் தடுப்பணை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கால்வாயில் சிலர் இறந்த நாயின் சடலத்தை வீசி உள்ளனர். இதனால், தண்ணீர் மாசடைந்து துர்நாற்றம் வீசி வருவதுடன், பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதுபற்றி 'தினத்தந்தி' புகார் பெட்டியில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. உடனே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நாயின் சடலத்தை அகற்றினர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் அந்த பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்