சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் அழகப்பா பூங்கா உள்ளது. இங்கு காலை, மாலை நேரத்தில் பொதுமக்கள் பலர் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். மேலும் சிறுவர், சிறுமிகள் விளையாடி மகிழ்வர். ஆனால் கடந்த சில நாட்களாக இளைஞர்கள் சிலர் இங்கு வாலிபால் உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடுகின்றனர். இதனால் நடைபயிற்சி மேற்கொள்பவர்களுக்கும், விளையாடும் குழந்தைகளுக்கும் இடையூறாக உள்ளது. இதுகுறித்துநடவடிக்கை எடுக்க வேண்டும்.