அந்தியூரை அடுத்த வேம்பத்தி கிராமம் ஓசைபட்டி பெரியசாமி கோவில் அருகில் கழிவுநீர் செல்லும் சிறிய பாலம் பழுதடைந்து காணப்பட்டது. எனவே பாலத்தை சீரமைக்க வேண்டும் என்ற செய்தி தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் வெளியானது. இதைத்தொடர்ந்து தற்போது அங்கு புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது. செய்தி வெளியிட்டு் உதவிய தினத்தந்தி நாளிதழுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.