மொடக்குறிச்சி 46 புதூர் அருகே பெரிய செட்டிபாளையத்தில் சமீபத்தில் குடிநீர் குழாய் பதிக்கும் போது ஏற்கனவே இருந்த குடிநீர் குழாய் உடைந்து போனதால் குடிநீர் வீணாகிறது. மேலும் குழிகளும் மூடப்படவில்லை என்று தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். செய்தி வெளியிட்டு உதவிய தினத்தந்தி நாளிதழுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.