ஆப்பக்கூடல் பேரூராட்சியில் சனிசந்தை அருகில் உள்ள மயானம் செல்லும் பாதை செடி, கொடிகள் வளர்ந்து காணப்பட்டது. இதனை சுத்தம் செய்து தர வேண்டு்ம் என்று தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். தற்போது செடி, கொடிகள் அகற்றப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்டு உதவிய தினத்தந்தி நாளிதழுக்கும் பொதுமக்கள் சார்பில் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.