அரக்கோணம்-திருத்தணி ரோடு, காஞ்சீபுரம், சோளிங்கர் ரோடு மற்றும் சுவால்பேட்டை, பஜார், பழைய பஸ் நிலையம் செல்லும் காந்தி ரோடு ஆகிய பிரதான நெடுஞ்சாலைகளில் உள்ள சென்டர் மீடியன் முற்றிலும் தெரியாத வகையில் சிதைந்துள்ளது. அதில் இருந்த பிரதிபலிப்பான்களும் சேதமாகி விட்டன. அந்த வழியாக இரவில் செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மீண்டும் சென்டர் மீடியனை சீரமைத்து, அதில் பிரதிபலிப்பான்களை புதிதாக பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சசிமோகன். அரக்கோணம்.