அரக்கோணம் ரெயில் நிலையத்தில் குரங்குகள் அட்டகாசம் செய்கின்றன. நடைமேடைகளில் அமர்ந்து கொண்டு பயணிகள், சிறுவர், சிறுமிகளை கடிக்க பாய்கின்றன. சிறுவர், சிறுமிகள் கையில் தின் பண்டம் வைத்திருந்தால் அதைப் பறித்து சாப்பிட பின்தொடர்ந்து ஓடி வருகின்றன. எனவே, குரங்குகளை பிடிக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சகவள்ளிசஞ்சீவி, அரக்கோணம்.