திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அங்காளம்மன் கோவில் தெரு, திருநீலகண்டன் தெரு, கோனத்தெரு போன்ற பகுதிகளில் குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது. வீடுகளில் உள்ள பொருட்களையும், கடையில் வாங்கி வரும் பழம், பால் பாக்கெட்டை கையிலிருந்து பிடுங்கி சாப்பிடுவதுடன், கீழே போட்டு வீணாக்குகின்றன. இதனால் பெண்கள், குழந்தைகள் அச்சத்தில் உள்ளனர். எனவே வனத்துறை அதிகாரிகள் குரங்குகளை பிடித்து காட்டில் விட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.