குரங்குகள் தொல்லை

Update: 2023-04-19 17:11 GMT

சோளிங்கர் தாலுகா கரிக்கல் ஊராட்சிக்கு உட்பட்ட ரெண்டாடி கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றித்திரிகின்றன. அவை மின்கம்பி, கேபிள் ஒயர் ஆகியவற்றில் தொங்கி அறுத்து விடுகின்றன. துணிகளை வெயிலில் உலர வைத்தால் தூக்கி செல்கின்றன. தெருவில் விளையாடும் குழந்தைகளை கடிக்க வருகின்றன. மக்களுக்கு தொல்லை கொடுக்கும் குரங்குகளை பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எம்.ரங்கநாதன், ஓய்வுபெற்ற ராணுவவீரர், கரிக்கல்ரெண்டாடி. 

மேலும் செய்திகள்