குரங்குகள் தொல்லை

Update: 2022-12-28 10:58 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரத்தில் உள்ள காப்புக் காட்டில் மான், முயல், காட்டுப்பன்றி, நரி மற்றும் குரங்குகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் உள்ளன. காப்புக்காட்ைட வனத்துறையினர் முறையாக பராமரிக்கவில்லை. காட்டு விலங்குகள் அடிக்கடி வெளியேறி ெரயிலில் சிக்கி விபத்துக்குள்ளாகின்றன. அதிகளவில் குரங்குகள் காட்டில் இருந்து வெளியேறி ெரயில் நிலையம், மருத்துவமனை, பள்ளி வளாகம் மற்றும் பொதுமக்கள் நடமாடும் இடங்களில் சுற்றித் திரிகின்றன. மக்கள் கையில் வைத்துள்ள பொருட்களை பிடிங்கி செல்கின்றன. ஒரு சில நேரத்தில் கையை கடித்து விடுவதால் மக்கள் அவதிப்படுகின்றனர். குரங்குகள் மற்றும் வனவிலங்குகளின் தொல்லை மற்றும் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அருள்செல்வகுமார், பாணாவரம்.

மேலும் செய்திகள்