திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது தலையாம்பள்ளம். அப்பகுதியில்மக்கள் நலன் கருத்தில் கொண்டு அரசு அறிவிக்கும் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்க கடந்த சில வருடங்களுக்கு முன்பு கிராம சேவை மைய கட்டிடம் கட்டப்பட்டது. கட்டி பல ஆண்டுகள் ஆகியும் அதை ஊராட்சி நிர்வாகம் பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை. இந்த நிலையில் அங்கு மினி கிளினிக் செயல்பட்டது. ஆனால் அதையும் மூடி விட்டனர். தற்போது எந்த ஒரு பயன்பாடும் இல்லாமல் பூட்டி கிடைக்கின்றது. எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பூட்டி கிடக்கும் கிராம சேவை மைய கட்டிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர ேவண்டும்.
-சிவா, தலையாம்பள்ளம்.