தண்டராம்பட்டு ஒன்றியம் பேராயம்பட்டு கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொதுச் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. ஆனால் கட்டப்பட்டு பல மாதங்கள் ஆகியும், அதைத் திறக்காமல் பூட்டியே கிடைக்கிறது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் திறந்தவெளியில் இயற்கை உபாதைகளை கழிக்கின்றனர். அந்தச் பொதுச்சுகாதார வளாகத்தை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும்.
-சிவா, பேராயம்பட்டு.