திருப்பத்தூர் பஸ் நிலைய பகுதியில் நகராட்சி சார்பில் ஆண்களுக்கான இலவச சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது. இது, கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பூட்டிக் கிடக்கிறது. இதனால் பஸ் நிலையத்தில் பயணிகள் அவதிப்படுகின்றனர். மேலும் அதன் அருகே கட்டண கழிப்பறைக்கு செல்ல வேண்டி உள்ளது. அங்கும் சுகாதாரம் இல்லாமலும், அதிக கட்டணம் வசூலிப்பதாலும் பயணிகள் அவதிப்படுகிறார்கள். எனவே பூட்டிக் கிடக்கும் சுகாதார வளாகத்தை திறக்க சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சண்முகம், திருப்பத்தூர்.