மதுபான கடைகளை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்

Update: 2024-03-03 10:54 GMT

வேலூர் காகிதப்பட்டறை எல்.ஐ.சி. காலனி கோவில்களுக்கு அருகில் மதுபானக் கடைகள் உள்ளன. அந்த மதுபானக் கடைகளால் பொதுமக்களுக்கு பிரச்சினைகளும், போக்குவரத்துக்கு இடையூறும் ஏற்படுகிறது. மதுபான பிரியர்கள் வாகனத்தில் செல்லும்போது வழி விடாமல் போதையில் தள்ளாடியபடி செல்கின்றனர். இதனால் விபத்துகள் ஏற்படுகிறது. எனவே மதுபானக் கடைகளை வேறு இடத்துக்கு மாற்ற மாவட்ட கலெக்டரிடம் பலமுறை மனு கொடுத்துள்ளோம். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இனியாவது கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா?

-ராஜேஷ், லோகேஸ்வரன், வேலூர். 

மேலும் செய்திகள்