கீழ்பென்னாத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ராஜாஜி தெருவில் அரசு கிளை நூலகம் உள்ளது. அங்கு புத்தகங்களை வைக்க போதிய வசதி இல்லை. இதனால் கோணிப்பைகளில் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் மேற்கூரை சிமெண்டு பூச்சு பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. கழிவறைக்கு தண்ணீர் வசதி இல்லை. நூலகத்தை முழு நேர நூலகமாக மாற்ற வேண்டும். இதுதொடர்பாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?
-கே.விக்ரம், கீழ்பென்னாத்தூர்.