ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்

Update: 2022-08-07 12:49 GMT

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே லாடவரம் கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. அதில் பலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். ஏரியில் உள்ள மரம், நீர்வரத்துக் கால்வாய் ஓடைகளை அழித்து பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். ஆக்கிரமிப்பை அகற்ற  வேண்டும் என ஒரு ஆண்டாக மனு கொடுத்தும் சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. வருவாய்த்துறையினரும் கண்டு கொள்ளவில்லை. மாவட்டத்தில் பல ஏரிகளில் இருந்த ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றி உள்ளனர். அதேபோல் லாடவரம் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் முன்வர வேண்டும். 

பாண்டியன், லாடவரம்

மேலும் செய்திகள்