காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. கடந்த மாதம் பெய்த மழையால் பேரூராட்சியில் தேங்கிய மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி இரவில் கொசுக்கடி அதிகமாக உள்ளது. இதனால் பேரூராட்சியில் கொசு தொல்லை அதிகமாக உள்ளது. இரவில் பச்சிளம் குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர் சரியாக தூங்காமல் அவதிப்படுகின்றனர். பேரூராட்சியில் கொசு மருந்து அடிக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?
-ராஜன், காவேரிப்பாக்கம்.