கண்ணமங்கலம் பெருமாள் கோவில் தெருவில் ஊராட்சி ஒன்றிய இந்து ஆரம்பப் பள்ளி உள்ளது. அங்கிருந்த கட்டிடங்கள் இடித்து தள்ளப்பட்டதால், தற்போது பழைய வகுப்பறை கட்டிடம் ஒன்ைற புனரமைப்பு செய்து, அதில் 1 முதல் 3-ம் வகுப்பு வரை ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர். 4 மற்றும் 5-ம் வகுப்புகள் அருகே உள்ள பெருமாள் கோவிலில் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு கோவிலில் தினமும் காலை மாலை சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் வந்து பூஜை செய்து தங்கி வருகின்றனர். இதனால் மாணவ-மாணவிகளுக்கு இடையூறாக உள்ளது. எனேவ பள்ளிக்கூடத்துக்கு புதிய வகுப்பறையை கட்டித்தர வேண்டும்.