இலவச கழிப்பறை கட்ட வேண்டும்

Update: 2022-07-12 12:22 GMT


குடியாத்தத்தில் பழைய, புதிய பஸ் நிலையங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இரண்டு பஸ்நிலையங்களிலும் தலா ஒரு கட்டணக் கழிப்பிடம் மட்டுமே உள்ளது. இலவச கழிப்பிடம் இல்லை. பழைய பஸ் நிலையத்தில் மட்டும் பெயரளவுக்கு சிறுநீர் கழிப்பிடம் ஒன்று இலவசமாக இயங்கி வருகிறது. இதற்குள் மூக்கை பிடித்துக்கொண்டுதான் செல்ல வேண்டும். புதிய பஸ்நிலையத்தில் செயல்படாத பழைய கட்டண கழிப்பறை உள்ளது. இதை சீரமைத்து இலவச கழிப்பறையாக மாற்ற வேண்டும். பயணிகளின் நலன் கருதி பழைய பஸ்நிலையத்திலும் இலவச கழிப்பறை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குரன், குடியாத்தம்.

மேலும் செய்திகள்

மயான வசதி