ஆரணி தாலுகா முள்ளிப்பட்டு கிராமத்தில் பெரிய ஏரி, சின்ன ஏரி உள்ளது. அந்த ஏரிகளில் உள்ள தண்ணீர் பாசனத்துக்கும், குடிநீருக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மீன் வளர்ப்புக்காக தனி நபருக்கு ஏரிகள் குத்தகைக்கு விடப்படுகிறது. இதனால் ஏரிகளில் விரைந்து தண்ணீர் வறண்டு போகிறது. எனவே ஏரிகளில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படும் கால்வாய்களை தூர்வார வேண்டும். ஏரிகளில் மீன் வளர்ப்புக்கு அரசு அனுமதியில்லாமல் குத்தகை விடுவதை தடை செய்ய வேண்டும்.
-பொதுமக்கள், முள்ளிப்பட்டு.