போலி வாகன நுழைவு கட்டண ரசீது

Update: 2024-11-17 12:52 GMT

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு கார்த்திகை மாதம் பக்தர்கள் அதிகளவில் வருகை தருவார்கள். இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நகராட்சி சார்பில் வாகன நுழைவு கட்டணம் வசூலிப்பதாக சிலர் போலி ரசீதுகளை தயாரித்து சோளிங்கர் மலைக்கோவில் அடிவாரத்தில் முறைகேடுகளில் ஈடுபடுகிறார்கள். வாகன நுழைவு கட்டணம் வசூலிப்பது சம்பந்தமாக எந்த அறிவிப்பும் இல்லை. மேலும் உள்ளூர் வாகனங்களுக்கும் வாகன நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே இத்தகைய முறைகேடுகளை தடுக்க மின்னணு வாகன நுழைவுச்சீட்டு வழங்க நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும்.

-கண்ணன், சோளிங்கர்.

மேலும் செய்திகள்