பேரணாம்பட்டு தாலுகா சாமரிஷிகுப்பம் கிராமத்தில் உள்ள ஏரி கரையையொட்டி ஆக்கிரமித்து 70 வீடுகள், கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. அவர்களுக்கு அரசால் கிராமத்தில் நிலம் வழங்கி அதில் வீடும் கட்டப்பட்டுள்ளன. ஆனால் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடு, கட்டிடங்களை இன்னும் அகற்றாமல் வைத்துள்ளனர். மழைக்காலங்களில் ஏரிக்கு தண்ணீர் வருவதற்கு ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் தடையாக உள்ளது. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
-சரவணன், சாமரிஷிகுப்பம்.