வேலூர் மண்டி வீதியில் வேன், லாரி, மினிலாரிகளில் பாரம் ஏற்றுவதற்கு இடம்பிடிப்பதற்காக காலையில் இருந்து மாலை வரை மாட்டு வண்டிகள், ரிக்ஷா வண்டிகள், தள்ளு வண்டிகள், மூட்டைகள், அட்டை பெட்டிகள் ஆகியவற்றை வைத்து ஆக்கிரமிப்பு செய்கிறார்கள். இதனால் மார்க்கெட்டுக்கும், மண்டிகளுக்கும் பொருட்களை வாங்க வருவோர் தங்களின் வாகனங்களை அங்கு நிறுத்தினால் தகாத வார்த்தைகளால் பேசி தகராறு செய்கிறார்கள். வியாபாரிகள், பொதுமக்கள் சாலைகளில் வாகனங்களை விடுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மண்டி வீதியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அருண்குமார், ரங்காபுரம்.