திருப்புத்தூர் நகராட்சி 35-வது வார்டுக்கு உட்பட்ட சுடுகாட்டில் ஏராளமான பன்றிகள் சுற்றித்திரிகின்றன. அந்தப் பன்றிகளால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. நகரில் உள்ள ஓட்டல்களில் இருந்து சேகரிக்கப்படும் உணவுக்கழிவுகளை கொண்டு வந்து சுடுகாட்டில் அத்துமீறி நுழைந்து கொட்டி பன்றிகளை வளர்த்து வருகிறார்கள். பன்றிகளால் நோய் பரவும் அபாயம் உள்ளது. நகராட்சி நிர்வாகம் சுடுகாட்டில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடிக்க வேண்டும்.
-மாறபாண்டியன், திருப்பத்தூர்.