வடிகால் வசதி தேவை

Update: 2022-09-18 10:51 GMT

வேலூர் மாவட்டம் ஊசூரை அடுத்த தெள்ளூர் ஊராட்சிக்கு உட்பட்ட வீராரெட்டிபாளையம் புது தெருவில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகிறார்கள். இந்தத் தெரு சாலையை விட, தாழ்வாக உள்ளதால், மழைக் காலத்தில் வீதியில் அதிகளவில் தண்ணீர் தேங்குகிறது. குடியிருப்பு பகுதியில் காலியாக உள்ள இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்குகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. தேங்கிய மழைநீரை வடிய வைக்க ஊராட்சி நிர்வாகம் வடிகால்வாய் வசதி செய்து தருமா?

-கணேசமூர்த்தி, ஊசூர். 

மேலும் செய்திகள்

மயான வசதி