வடி கால்வாய் வசதி தேவை

Update: 2025-10-05 18:49 GMT

ஆரணி ஆரணிப்பாளையம் சீதாராமய்யர் தெருவில் வடி கால்வாய் வசதி இல்லாததால் லேசான மழைப் பெய்தாலும் சாலையில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. விஷ பூச்சிகள் வீடுகளுக்குள் புகும் அவலம் நடந்து வருகிறது. நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து சீதாராமய்யர் தெருவில் வடிநீர் கால்வாய் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

-தேவதாஸ், ஆரணி.

மேலும் செய்திகள்