நாய்கள் தொல்லை

Update: 2022-07-15 18:02 GMT


ராணிப்பேட்டை மாவட்டம் விளாப்பாக்கம் பேரூராட்சியில் பஸ் நிலையம், புதிய காலனி பகுதி, லட்சுமிபுரம் ஆகிய பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இந்த நாய்கள் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்களை கடிக்க துரத்துவதால் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகிறார்கள். இதனால் வாகன ஓட்டிகள் பயந்துசெல்ல வேண்டிய நிலை உள்ளது. பொதுமக்களும் அச்சத்துடன் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தெரு நாய்களை பிடித்து செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரா.இளவரசன், விளாப்பாக்கம்.

மேலும் செய்திகள்

மயான வசதி