ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அண்ணா சிலை பகுதிகளில் நாய் தொல்லை அதிகமாக உள்ளது. இந்தப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கும், மாலை நேரங்களில் டியூசன் செல்லும் மாணவ- மாணவிகள் நாய் தொல்லையால் மிகுந்த அச்சமடைகின்றனர். பகல் மற்றும் இரவு நேரங்களில் சாலைகளிலேயே படுத்து உறங்குவதும் சுற்றித் திரிவதாக உள்ளதால் வாகன ஓட்டிகளும் அச்சத்துடன் செல்கின்றனர். நாய்களை பிடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.