திருப்பத்தூரில் அனைத்துத் தெருக்களிலும் மாடுகள் அதிகமாக சுற்றித்திரிகிறது. மிரண்டு ஓடும் மாடுகள் வாகன ஓட்டிகள் மீதும், நடந்து செல்வோர் மீதும் திடீரெனப் பாய்ந்து விடுகிறது.
அதிக வாகன போக்குவரத்துள்ள சாலையின்நடுவே நின்று விபத்தை ஏற்படுத்துகிறது. ஒருசில இடத்தில் சாலையிலேயே படுத்து விடுகின்றன. நகராட்சி நிர்வாகம் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து, ரோடுகளில் மாடுகள் நடமாடாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜேந்திரன், திருப்பத்தூர்.