சோளிங்கரை அடுத்த கொடைக்கல் கிராமத்தில் நூலகம் உள்ளது. இந்த நூலக கட்டிடம் 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. அங்கு, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. கட்டிடம் சேதம் அடைந்து, சிமெண்டு பூச்சு பெயர்ந்து காணப்படுகிறது. மழைக்காலங்களில் மழைநீர் கசிந்து சுவர்களிலும், புத்தகங்களிலும் விழுகின்றன. புத்தகங்களை பாதுகாக்க பழைய கட்டிடத்தை அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்டித் தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பார்த்தசாரதி, கொடைக்கல்.