ஒடுகத்தூர்-மாதனூர் மாநில நெடுஞ்சாலையில் உள்ள அகரம் உயர்நிலைப்பள்ளி சுற்றுச்சுவரை இடித்து தரைமட்டமாக்கி விட்டனர். அந்தச் சுற்றுச்சுவர் ஓரத்தில் இருந்த 4 புளியமரங்களை ரசாயனத்தை ஊற்றி பட்டுப்போக செய்து விட்டனர். பள்ளியில் இருந்து வெளியேறும் மழைநீர் செல்லும் நெடுஞ்சாலைக்கு குறுக்கே உள்ள சிறு பாலத்தை மண் கொட்டி அடைத்து விட்டார்கள். இதனால் பள்ளியிலேயே மழைநீர் தேங்கும் நிலை உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எஸ்.கே.லட்சுமணன், அகரம்.