உத்திரகாவேரி ஆற்றில் குருவராஜபாளையம் தடுப்பணை அருகே மராட்டிபாளையம் பிரதான கால்வாயில் தடுப்புச்சுவர் கட்டப்பட்டது. அந்தத் தடுப்புச்சுவரை விஷமிகள் இடித்து விட்டார்கள். இதனால் கால்வாய்க்கு ஆற்று தண்ணீர் வரவில்லை. 84 ஏக்கர் பரப்பளவு கொண்ட அகரம் ஏரிக்கும் நீர் வரத்து இல்லை. கால்வாய் கரை தடுப்புச்சுவரை இடித்தவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜா, மராட்டிபாளையம்.