சேதம் அடைந்த கால்வாய்

Update: 2025-09-14 17:42 GMT

வேலூர் சத்துவாச்சாரி மந்தைவெளியில் இருந்து பாலாற்றுக்கு செல்லும் பிரதான சாலையில், மழைநீர் மற்றும் கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் மீது அமைக்கப்பட்டுள்ள சிமெண்டு சிலாப்புகள் உறுதி இழந்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓட்டை விழுந்தது. ஆரம்ப நிலையில் சரிசெய்யப்படாத காரணத்தால், தற்போது கால்வாய் முழுவதும் அமைக்கப்பட்ட சிலாப்புகள் நொறுங்கி, அரை அடி ஆழத்திற்கு கீழே இறங்கி சேதம் அடைந்துள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுரேஷ், வேலூர்.

மேலும் செய்திகள்