சாலையில் வீசப்படும் பிளாஸ்டிக் டேப்பினால் பாதிப்பு

Update: 2023-05-07 16:59 GMT

வாலாஜாவில் பிரதான சாலைகளில் உள்ள கடைகளுக்கு வாகனங்களில் பார்சல்கள் வருகின்றன. அந்தப் பார்சல்களை கட்ட பயன்படுத்தப்படும் வட்ட வடிவிலான பிளாஸ்டிக் டேப் நாடாவை பொறுப்பில்லாமல் சாலையிலேேய வீசி எறிகின்றனர். இதனால் சாலைகளில் வரும் குழந்தைகள், கண் பார்வையற்றோர் முதியோர்கள் கால்களில் அந்தப் பிளாஸ்டிக் டேப் சுற்றி தடுமாறி கீழே விழுகின்றனர். எனவே இது குறித்து கடை உரிமையாளர்களுக்கு தகுந்த அறிவுரை வழங்கி பிளாஸ்டிக் டேப் நாடாவை குப்பை தொட்டிகளில் போட அறிவுறுத்த வேண்டும்.

-ஜவகர், வாலாஜா.

மேலும் செய்திகள்