வந்தவாசியில் ஏராளமான மாடுகள் சுற்றித்திரிகின்றன. அந்த மாடுகளால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். பழைய பஸ் நிலையம் பஜார் வீதியில் உள்ள பழக்கடை மற்றும் காய்கறி கடைகளில் தேவையில்லாத பொருட்களை ரோட்டில் வீசுவதால் அந்தப் பொருட்களை மாடுகள் சாப்பிடுவதற்காக சண்டையிட்டு கொண்டு ஓடும்போது, அந்த வழியாக நடந்து செல்லும் மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மீது மோதி பெரும் விபத்துகள் நடக்கிறது. எனவே நகராட்சி நிர்வாகம் மாடுகளை பிடித்து மக்களை காப்பாற்ற வேண்டும்.
-மகேஷ்குமார், வந்தவாசி.