மாடுகள் தொல்லை

Update: 2024-12-22 20:17 GMT

வந்தவாசி பழைய பஸ் நிலையத்தில் ஏராளமான மாடுகள் சுற்றித்திரிகின்றன. அந்த மாடுகளால் வியாபாரிகள், பயணிகள் அவதிப்படுகின்றனர். கடைகளில் தொங்கவிட்டிருக்கும் வாழைப்பழங்களை மாடுகள் சாப்பிட்டு நஷ்டப்படுத்துகின்றன. பஸ் நிலையங்களில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளை முட்டுகிறது. மாடுகள் தொல்லையை கட்டப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜி.பாஸ்கர், வந்தவாசி. 

மேலும் செய்திகள்