தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் பைபாஸ் ரோட்டில் உள்ள மின்கம்பத்தில் மின்விளக்கு இ்ல்லாததால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. வாகன ஓட்டிகளும் அச்சத்துடனே பயணிக்கின்றனர். எனவே மின்கம்பத்தில் மின்விளக்கு அமைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.