செங்கம் பேரூராட்சியில் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், மில்லத் நகர், போளூர் சாலை, தளவாநாயக்கன்பேட்டை, மேலப்பாளையம், ராஜவீதி, பெருமாள் கோவில் தெரு உள்பட பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து அதிகமாக உள்ளது. அந்தப் பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள் சுற்றித் திரிகின்றன. பேரூராட்சி நிர்வாகம் மாடுகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.
-சிவச்சந்திரன், செங்கம்.