
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயத்தில் உள்ள பஸ் நிலையத்தில் இரவு பகல் பாராமல் ஏராளமான மாடுகள் சுற்றித் திரிகின்றன. இதனால் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. எனவே பேரூராட்சி நிர்வாகம் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க ேவண்டும். இல்ைலயேல் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.
-சத்தியமூர்த்தி, ஆலங்காயம்.