வேலூர் மாநகராட்சி 41-வது வார்டு கஸ்பா பொன்னி நகரில் உள்ள சமுதாயக்கூடம் ரூ.15 லட்சத்தில் கட்டப்பட்டதாகும். அந்தச் சமுதாயக்கூடம் இன்னும் மக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை. சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. இதை, மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்க வேண்டும்.
-குமார், காட்பாடி.