மூடப்பட்ட கடைகளை திறக்க வேண்டும்

Update: 2024-11-17 12:48 GMT

ராணிப்பேட்டை உழவர் சந்தையில் பல்வேறு கடைகள் இயங்கி வருகின்றன. அந்தக் கடைகளில் தரமான முதல் தரம் வெங்காயம், உருளை, இஞ்சி, பூண்டு போன்ற பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அதில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மூலம் இயங்கி வந்த 2 கடைகள் மூடப்பட்டுள்ளன. அந்தக் கடைகள் இனிமேல் திறக்கப்பட மாட்டாது எனக் கூறி வருகின்றனர். உழவர் சந்தையில் மூடப்பட்ட கடைகளை மீண்டும் திறக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜேஷ், ராணிப்பேட்டை. 

மேலும் செய்திகள்