ஆரணியை அடுத்த அக்ராபாளையம் கிராமத்தில் ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ள பகுதியில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பக்கக் கால்வாய் அமைப்பதற்காக பள்ளம் தோண்டினார்கள். அந்தப் பள்ளத்தில் இன்னும் கால்வாய் கட்டப்படவில்லை. கால்வாய் கட்டும் பணியை கிடப்பில் போட்டு விட்டனர். மழைக் காலங்களில் மழைநீர் தேங்கும். அதில் சிறுவர், சிறுமிகள் தவறி விழுந்து அசம்பாவிதம் நடக்க வாய்ப்புள்ளது. எனவே பக்கக் கால்வாய் கட்டும் பணிகளை விரைந்து தொடக்க வேண்டும்.
-செல்வராஜ், ஆரணி.