கீழ்பென்னாத்தூர் ஒன்றியம் வயலூர் கிராமத்தில் பஜனை கோவில் அருகில் நாயுடு தெருவில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை. எங்கள் தெருவுக்கு கால்வாய் வசதி வேண்டி பலமுறை மனு கொடுத்தும் அதிகாரிகள் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. கழிவுநீர், மழைநீர் செல்ல வழி இல்லாமல் வீடுகளில் புகுந்து விடுகிறது. எங்கள் தெருவில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்தி தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
-ப.ரவி, வயலூர்.