ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பஸ் நிலைய வளாகத்தில் மழைநீர் வடிய கால்வாய் வசதி இல்லாததால், மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. பஸ் நிலையத்துக்குள் வரும் பயணிகள், மாணவ-மாணவிகள், முதயோர் அவதிப்படுகின்றனர். பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பஸ் நிலைய வளாகத்தில் கால்வாய் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
-பொதுமக்கள், நெமிலி.