கலசப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தென்மாதிமங்கலம் ஓடை பல வருடங்களாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் வரும் மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விவசாய நிலங்கள் முற்றிலும் பாதிக்கப்படும். எனவே சம்மந்தப்பட்ட கலசப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆக்கிரமிப்பை அகற்றி நீர்நிலைகளை பாதுகாக்க முன்வர வேண்டும்.