பள்ளம் சரிசெய்யப்படுமா?

Update: 2023-03-12 13:17 GMT



வேலூர் சலவன்பேட்டை அம்மணாங்குட்டை ரோட்டில் குடிநீர் பைப் பழுதை சரிசெய்வதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. குடிநீர் பைப் சரிசெய்யப்பட்டு 3 மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால் தோண்டப்பட்ட பள்ளத்தை மூடாமல் அப்படியே விட்டுள்ளனர். இதனால் இந்தவழியாக செல்லும் சிறுவர்கள், முதியவர்கள் பள்ளத்தில் தவறிவிழும் நிலை உள்ளது. உடனடியாக பள்ளத்தை சரிசெய்ய வேண்டும்.


மேலும் செய்திகள்