ஆரணி-வேலூர் நெடுஞ்சாலையில் சேவூர் ஊராட்சிக்கு உட்பட்ட ரகுநாதபுரம் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்கூடம் உள்ளது. அதன் மேற்கூரை பழுதடைந்துள்ளது. அங்கு, இரவில் சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. பஸ் நிறுத்தத்தில் பயணிகள் அமரும்போது மேற்கூரை சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து தலையில் விழ வாய்ப்புகள் உள்ளது. எனவே பழுதடைந்த நிழற்கூடத்தை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ஸ்ரீதர், ஆரணி.