வேலூர் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகே இரும்பு கம்பிகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் உள்ள சுவரில் விரிசல் ஏற்பட்டு விழும் அபாயத்தில் உள்ளது. அங்குதான் கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் மனுக்கள் எழுதுகிறார்கள். எனவே விபரீதம் ஏற்படுவதற்கு முன்பு சுவரில் உள்ள விரிசலை சரி செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாயவன், வேலூர்.