கண்ணமங்கலம் பெருமாள் கோவில் தெருவில் இந்து ஆரம்பப் பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளியில் பழுதடைந்த அனைத்து வகுப்பறை கட்டிடங்களும் இடிக்கப்பட்டன. ஆரணி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.25 லட்சம் மதிப்பில் புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணி நடந்து வருகிறது. அந்தப் பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செங்குட்டுவன், கண்ணமங்கலம்.